
கிரீஸ் நாட்டில் கடந்த 4 ஆண்டுகளாக பிரதமர் அலெக்சிஸ் திசிப்ராஸ் தலைமையிலான இடதுசாரி சிரிசா (syriza) கட்சியின் ஆட்சி இடம்பெற்று வருகிறது.
இடதுசாரி கட்சியின் ஆட்சிக்காலம் நிறைவடைந்ததால், நேற்று முன்தினம் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டு வாக்குகளை எண்ணும் பணிகள் இடம்பெற்றன. இதன்படி பெறுபேறுகள் நேற்று வெளிவர ஆரம்பித்தன.
மொத்தம் உள்ள 300 தொகுதிகளில், எதிர்க்கட்சியான கொன்சர்வேற்றிவ் கட்சி 160-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
ஆளும் கட்சிக்கு சுமார் 90 இடங்களே கிடைத்த நிலையில், பிரதமர் அலெக்சிஸ் திசிப்ராஸ் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். இதனடிப்படையில், கொன்சர்வேற்றிவ் கட்சி தலைவர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ், பிரதமராக பதவி ஏற்கவுள்ளார்.
தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு கருத்து வௌியிட்ட அவர் “கிரீஸ் நாட்டை மாற்றியமைக்க நான் ஆதரவு கோரினேன். அதற்கு நீங்கள் தாராளமாக ஆதரவு அளித்துள்ளீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
