
“தவறான தகவல்களைப் பரப்புவதை தடுக்கும் முயற்சி” என்ற தலைப்பின் கீழ் குறித்த கருத்தரங்கு இந்த வாரம் இடம்பெறவுள்ளது.
சுமார் 60 அமைச்சர்கள் மற்றும் 1,000 செய்தியாளர்கள், சமூக அங்கத்தவர்கள் இந்த ஊடகச் சுதந்திரம் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்கவுள்ளனர்.
எனினும், பிரித்தானியாவின் வௌிவிவகாரத்துறை அமைச்சு அலுவலகம், ரஷ்யாவின் ஆர்.ரி. எனப்படும் ரஷ்யா ருடே மற்றும் ஸ்புட்னிக் ஆகிய ஊடக நிறுவனங்களுக்கு கருத்தரங்கில் பங்கேற்பதற்கான அங்கீகாரத்தை மறுத்துள்ளது.
எவ்வாறாயினும், ரஷ்ய தூதரகம் இந்த தீர்மானத்தை “நேரடி அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட பாகுபாடு” என்று விமர்சித்துள்ளது.
இதனிடையே, கருத்தரங்கு தொடர்பாக கருத்து வௌியிட்டுள்ள பிரித்தானிய வௌிவிவகார அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர், “தவறான தகவல்களை பரப்புவதில் ரஷ்யா ருடே மற்றும் ஸ்புட்னிக் ஊடகங்களின் பங்கு வெகுவாக இருப்பதால் நாங்கள் அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கவில்லை.
அங்கீகாரத்திற்கான அனைத்து கோரிக்கைகளுக்கும் இடமளிக்க முடியாது என்றாலும், ரஷ்யா உட்பட சர்வதேச ஊடகங்கள் அனைத்திலுமிருந்தும் ஊடகவியலாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்” என்று தெரிவித்தார்.
