காலநிலை மாற்றம் குறித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிலைப்பாடு தொடர்பாக கவலை தெரிவித்ததுடன் மிகப்பெரிய பிரச்சினைகளை உருவாக்கக்கூடிய காலநிலை மாற்றத்தை கையாள்வதில் அசாதாரண எதிர்ப்பு இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

உலகெங்கிலும் காலநிலை மாற்றத்துக்கு எதிராக அதிகரித்துவரும் இளைஞர்களின் ஆர்ப்பாட்டங்களை 19 ஆம் நூற்றாண்டில் அடிமைத்தனத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களோடு அட்டன்பரோ ஒப்பிட்டுப் பாராட்டியுள்ளார்.
காலநிலை மாற்றத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு சர்வதேச அளவில் அதிகளவு பணம் செலவாகும் எனவும் மக்கள் தங்கள் வாழ்க்கை முறைகளை மாற்ற வேண்டும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் காலநிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சியில் பிரித்தானிய விஞ்ஞானிகள் முற்றிலும் முன்னணி வகிப்பதை பாராட்டிய அட்டன்பரோ மற்ற நாடுகளை விட பிரித்தானியாவுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
