
கனடாவிலிருந்து தனது மகனுடன் அவுஸ்ரேலியாவின் சிட்னி நகருக்குச் சென்ற பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடமிருந்து 12 கிலோ கிராம் கொக்கைய்ன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
42 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, கைதுசெய்யப்பட்டுள்ள குறித்த பெண்ணிற்கு ஆயுள்தண்டனை விதிக்கப்படலாம் என அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
