
பிரிட்டிஷ் கொலம்பியாவில் பெற்றோரைப் பிரிந்து வீதியில் வசித்து வந்த இலிஜா லயன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கத்திக்குத்திற்கு இலக்கான இலிஜா லயன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள இலிஜா லயனின் தாயார், ‘தனியாகவும், சுதந்திரமாகவும் வாழவேண்டும் எனக் கூறி எங்களைப் பிரிந்து இலிஜா மூன்று மாதங்களுக்கு முன்னர் வெளியில் சென்றான்.
சில சமயம் அதிக சுதந்திரம் உயிரைப் பறித்து விடுகிறது. எங்கள் கைகளில் தான் அவன் உயிர் பிரிந்தது’ என குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கத்திக்குத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைதுசெய்யப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
