
அலரிமாளிகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறினார்.
மேலும் இனவாதத்தினூடாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற எதிரணியினர் முயற்சித்து வருகின்றனர் எனவும் ஐ.தே.க. உறுப்பினர்களை இனவாதிகளாக காட்டி சிறுப்பான்மையினரின் வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
அத்தோடு கடந்த 2015 ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதாக கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று அந்த திருத்தம் தேவையற்றது என தெரிவித்தது வருகிறனார்கள். நாட்டில் மீண்டும் சர்வாதிகாரம் தலைத்தூக்கும் போதே இந்த அரசியலமைப்புத் திருத்தத்தின் அருமை தெரியவரும் என அவர் சுட்டிக்காட்டினார்.
ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்றுக்கொடுக்காமல் இந்த பிரச்சினைக் காரணமாக கொண்டு சிங்கள பெரும்பான்மையினரின் பலத்துடன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான முயற்சிகளையே முன்னெடுத்து வருகின்றனர் என கூறினார்.
இதேவேளை மறுபுறம் சிறுப்பான்மை மக்கள் மத்தியில் அச்ச நிலையை உருவாக்கி அவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்
