
முழுமையாக நீக்கக்கோரி தனிநபர் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல லால் பண்டாரிகொடவினால் நாடாளுமன்றத்தில் இந்த தனிநபர் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் இந்த பிரேரணையை அவர் கையளித்துள்ளார்.
இந்த பிரேரணையை, நாடாளுமன்ற விவாதத்துக்கு உட்படுத்த முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
போதைப் பொருளுடன் தொடர்புடைய மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனையை நிறைவேற்றும் செயற்பாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார்.
அந்தவகையில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளவர்களில் சிலருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற ஒப்பமிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மரண தண்டைனையை அரசியல் அமைப்பிலிருந்தே நீக்கக் கோரி பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மரண தண்டனையை நிறைவேற்றும் செயற்பாட்டுக்கு உயர் நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
