
பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், பலாலி விமான நிலையத்துக்காக வீதிகளில் நிர்க்கதியாக உள்ள மக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டிருந்தால் அதற்கு நட்டஈடு வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச விமான நிலையமாக பலாலி விமான நிலையம் தரமுயர்த்தப்பட்டு, அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் இன்று (வெள்ளிக்கிழமை) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம், குறுகிய காலத்தில் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுத்து நாட்டில் அனைத்து மக்களும் ஒன்றாக வாழக்கூடிய ஒரு நிலையில் வடக்கு கிழக்கு மக்களுக்கு இந்த வரப்பிரசாதத்தை வழங்கியுள்ளது.
கடந்த காலங்களில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு முன்னர் பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு போக்குவரத்தை மேற்கொண்டுள்ளனர்.
அத்தகையதொரு சூழ்நிலையை அரசாங்கம் மீண்டும் உருவாக்கிக் கொடுத்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளுக்கும் வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற மக்களுக்கும் உறவு பாலத்தை அமைக்கும் முகமாக பலாலி விமான நிலைய வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால் எமது மக்கள் கடந்த காலங்களில் யுத்தத்திற்கு முகங்கொடுத்து 30 வருடங்களாக வெளிமாவட்டங்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் முகாம்களில் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.
இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க வந்த பின்னர் அதிகளவான காணிகள் மக்களுக்காக விடுவிக்கப்பட்டுள்ளது. எனினும் காணிகள் பற்றாக்குறைகளும் வீடுகளும் பற்றாக்குறைகளும் இன்னும் அதிகம் உள்ளன.
இந்நிலையில், பலாலி விமான நிலையத்துக்காக மக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டிருந்தால் நட்டஈடு வழங்க வேண்டும். காரணம் இன்னும் அவர்கள் வீதிகளில் நிர்க்கதியாக உள்ளனர்” என அவர் மேலும் தெரிவித்தார்.
