
கனேடிய பெண்ணிற்கு ஆயுட்கால சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தடை செய்யப்பட்ட போதைப் பொருளை தமது நாட்டுக்குள் எடுத்து வந்ததாக குற்றஞ்சாட்டி கனேடிய பெண் ஒருவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அவுஸ்ரேலிய சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார்.
கனடாவில் இருந்து தனது மகனுடன் புறப்பட்டுச் சென்ற குறித்த 42 வயதுப் பெண்ணின், பயணப் பொதியினைச் சோதனையிட்ட போது, அதற்குள் இருந்து சுமார் 12 கிலோகிராம் போதைப் பொருளைக் கைப்பற்றியதாக அவுஸ்ரேலிய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது கொக்கெய்ன் வகை போதைப் பொருள் என்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், குறித்த கனேடியப் பெண் மீது, தடை செய்யப்பட்ட போதைப் பொருளை வர்த்தகம் செய்யும் தொகையில் எடுத்து வந்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிக பட்சமாக ஆயுட்கால சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
