
அதிகம் தெரியாது என்பதனை அண்மைய கருத்துக் கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன.
கனேடிய குடியுரிமையைப் பெற்றுக்கொள்ள விரும்பும் குடிவரவாளர்களிடம் கேட்கப்படும் கனடா குறித்த பொதுவான கேள்விகளை, 1,645 கனேடியர்களிடம் முன்வைத்த நிலையிலேயே, இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதில் சுமார் 12 சதவீதம் பேர் மட்டுமே எட்டு அல்லது அதற்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு சரியான பதிலை கூறியுள்ளனர். சராசரியாக பத்தில் ஐந்து கேள்விகளுக்கே குறித்த அந்த கனேடியர்களால் விடை சரியாக வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை மாநிலங்கள் வாரியாக இந்த பரீட்சையில் அதிக அளவாக 22 சதவீதம் பேர் ஏழுக்கும் அதிகமான கேள்விகளுக்கு விடையளித்து முதல் நிலையில் பிரிட்டிஷ் கொலம்பியா உள்ள நிலையில், மிகவும் குறைவானோர் சித்தியடைந்து, 95 சதவீதம் பேர் சித்தியடையாத மாநிலமாக கியூபெக் பதிவாகியுள்ளது.
