LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, July 7, 2019

பொதுபல சேனாவின் கண்டி மாநாட்டில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

கண்டி இன்று இடம்பெற்ற மாநாட்டில்
பொதுபலசேனாவால் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இலங்கை தாய்நாட்டை ஒரு வழித்தடத்தில் கொண்டு செல்லும் தொனிப் பொருளுடனான இந்த மாநாடு கண்டி போகம்பரை விளையாட்டரங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

இம்மாநாட்டில், பௌத்த மதத்தை பாதுகாத்து அதற்கு முன்னுரிமை வழங்க கூடிய அரசியலமைப்பு அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தி தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ள இஸ்லாமிய தனிச் சட்டங்களை உடனடியாக நீக்க வேண்டும் என வலியறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அடிப்படைவாத கல்வியை போதிக்கும் அனைத்து கல்வி நிலையங்களையும் காலதமின்றி அரசு தடைச்செய்ய வேண்டும் எனத் தெரிவித்து 9 தீர்மானங்களை இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மாநாட்டில் பொதுபல சேனா நிறைவேற்றியுள்ளது.

அந்தவகையில்,

1. சிங்கள இராச்சியம் உருவாக்க பாரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

2. ஒரு நாடு, ஒரு இனம், ஒரே நீதி

03. பௌத்த மத பாதுகாப்பு மற்றும் எழுச்சி பெறல்.

04. தேசிய பாதுகாப்பு

05. தேசிய உரிமை பாதுகாப்பு

06.நிலையான பொருளாதாரம்.

07. தேசபற்றினை கொண்ட கல்வி

08.வீடமைப்பு , உட்கட்டமைப்பு வசதிகள், சனத்தொகை மதிப்பீட்டு முகாமைத்துவம்

09. சுகாதாரம் மற்றும் போசனை போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7