
ரொறன்ரோ தொடர்ந்தும் விளங்குவதாக ரொறன்ரோ பொலிஸ் தலைமை அதிகாரி மார்க் சௌன்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
‘கனடா டே’ வார இறுதி விடுமுறைக் காலப்பகுதி உட்பட அண்மைய நாட்களில் பல்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள போதிலும், அவர் இந்த கருத்தினை வெளியிட்டிருப்பதாவது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பொலிஸ் தலைமை அதிகாரி மார்க் சௌன்டர்ஸ் கூறுகையில், “யார் ஒருவர் சுடப்பட்டாலும் அது ரொறன்ரோ பொலிஸாரால் மிகவும் முக்கியமான ஒரு சம்பவமாகவே நோக்கப்படுகிறது. குறிப்பாக கோடை காலங்களில் இவ்வாறான துப்பாக்கி வன்முறைகள் அதிகரிப்பது இயல்பானதே.
இதே அளவான வேறு வட அமெரிக்க நகரங்களுடன் ஒப்பிடுகையில், ரொறன்ரோ தொடர்ந்தும் குறைந்த அளவு கொலைகள் இடம்பெறும் இடமாகவே உள்ளது” என கூறினார்.
கடந்த ஆண்டு இதே காலப்பகுதி வரையில் ரொறன்ரோவில் 44 கொலைகள் இடம்பெற்றிருந்த நிலையில், இநத ஆண்டில் இதுவரை ரொறன்ரோவில் மொத்தம் 32 கொலைகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
