
குடியிருப்பின் மின் தூக்கியினுள், பெண் ஒருவரைத் தாக்கி கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான கண்காணிப்பு ஒளிப்பதிவு ஆதாரம் ஒன்றினை வெளியிட்டுள்ள ரொறன்ரோ பொலிஸார், சந்தேக நபரை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
சந்தேக நபர் சுமார் 30 வயது மதிக்கத்தக்க, ஏறக்குறைய ஐந்து அடி ஒன்பது அங்குலம் உயரமுள்ள, சராசரி உடல்வாகு கொண்ட, மிகவும் கட்டையாக வெட்டிய மண்ணிற தலைமுடியைக் கொண்ட, ஓரளவு வெள்ளை நிற ஆண் என்று பொலிஸார் அடையாளம் வெளியிட்டுள்ளனர்.
சந்தேக நபர் ஆயுதத்துடன் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகவும், ஆபத்தானவராக இருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ள பொலிஸார், அவர் குறித்து தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
சென் கிளையர் அவனியூ மற்றும் அவனியூ வீதிப் பகுதியில் அமைந்துள்ள குறித்த அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த முதலாம் திகதி சனிக்கிழமை இரவு 11.20 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் மின் தூக்கியினுள் சென்ற 35 வயதான பெண் ஒருவரைப் பின்தொடர்ந்த சந்தேக நபர், மின்தூக்கியினுள் வைத்து தன்னிடம் ஆயுதம் உள்ளதாக மிரட்டியதுடன், பின்னர் அந்தப் பெண்ணைத் தாக்கி அவரின் பணப்பையைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்.
