
நிகழ்வை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
பா.ஜ.க. நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்நிகழ்வை அவர் ஆரம்பித்துள்ளார்.
பா.ஜ.க. நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாள் இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதிலும் பா.ஜ.க. உறுப்பினர் இணைப்பை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டு, அதற்காக முகாம்களும் நடத்தப்படுகின்றன.
இதில் அந்தந்த பகுதி பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்துகொண்டு, உறுப்பினர் சேர்க்கையை முன்னின்று நடத்துகின்றனர்.
அவ்வகையில், வாரணாசியில் இன்று நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.
இதன் போது பேசிய மோடி, மத்திய பட்ஜெட்டில் உள்ள அம்சங்களை சுட்டிக்காட்டி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5 இலட்சம் கோடி டொலர் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியாவை உருவாக்குவதே அரசின் நோக்கம் எனவும், அதற்கான பாதையை பட்ஜெட்டில் காட்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.
