
அபிவிருத்தி உபாய மார்க்கம் தொடர்பில் தெளிவில்லாத தரப்பினர் நாட்டை நிர்வகித்து வருகின்றமையினால்தான் நாடு பொருளாதார ரீதியாக இன்னும் பின்தங்கிய நிலையில் காணப்படுவதாகவும் அவர் விசனம் வெளியிட்டார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஆசியாவில் அபிவிருத்தி நடவடிக்கைகள், இன்று வேகமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
வடக்கு ஆசியா, கிழக்கு ஆசியா, தெற்காசியா என அனைத்தும் மிகவும் வேமாக வளர்ச்சியடைந்து வருகின்றன.எனினும், தெற்காசியாவைப் பொறுத்தவரை இலங்கைதான் மிகவும் மந்தமான நிலையில் வளர்ச்சியடைந்து வருகிறது.
ஆப்கானிஸ்தான் கூட விரைவில், எம்மை பின்தள்ளும் ஒரு நிலைமையே காணப்படுகிறது. இந்த செயற்பாட்டை மாற்றியமைக்காமல் நாம் முன்னோக்கி பயணிக்கவே முடியாது.
நாம் புதிய சந்தைகளை உருவாக்க வேண்டும். அமெரிக்காவுக்கும், இங்கிலாந்துக்கும் தேயிலையை மாற்றும் ஏற்றுமதி செய்து எமது பொருளாதாரத்தை ஒருபோதும் முன்னேற்ற முடியாது.
இன்று சீனாவை எடுத்துக்கொண்டால், அந்த ஒரு நாட்டில் மட்டும் சந்தைப் பெறுமதி, 900 மில்லியனாகக் காணப்படுகிறது. இதுதான் வளர்ச்சி. புதிய புதிய முயற்சிகளை சந்தையில் அறிமுகப்படுத்தியமையே இதற்கானக் காரணமாக இருக்கிறது.
எனினும், இது எமது அரசியல்வாதிகளுக்கு தெரிவதில்லை. விளக்கம் இல்லாத அமைச்சரவையும், அரசாங்கமும் தான் இன்று நாட்டை நிர்வகித்துக் கொண்டிருக்கிறது. இவர்களுக்கு அபிவிருத்தி உபாய மார்க்கப்பத்தை பலப்படுத்துவதற்கான சக்திக்கூட இல்லை.” என கூறினார்.
