குறித்த நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், முன்னாள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கை பரப்புச் செயலாளர் அருந்தவபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது குறித்த இணைய வானொலி அறிமுகப்படுத்தப்பட்டதுடன், பாடசாலை மாணவியர்களின் நடன நிகழ்வும் இடம்பெற்றது. தொடர்ந்து கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.