
அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளமைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
தேனி மாவட்ட மக்களின் எதிர்ப்பை மீறியும், உயர் நீதிமன்றம் மற்றும் பசுமைத் தீர்ப்பாயத்தில், இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையிலும் மத்திய அரசு தன்னிச்சையாக அனுமதி வழங்கியுள்ளமை கண்டனத்துக்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்திருப்பது, தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்ட மக்களின் எதிர்ப்பை மீறி, உயர் நீதிமன்றத்திலும், பசுமைத் தீர்ப்பாயத்திலும் இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மத்திய அரசு தன்னிச்சையாக இது போன்ற முடிவினை எடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதால் சுற்றுச் சூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுவதுடன், மிக மோசமான கதிரியக்க ஆபத்துக்களையும் விளைவிக்கும் என்று தேனி மாவட்ட மக்கள் நீண்ட காலமாக போராடி வருகிறார்கள்.
இந்நிலையில், தமிழக மக்களின் பாதுகாப்புப் பற்றி சிறிதும் அக்கறையின்றி மத்திய பா.ஜ.க. அரசு, இந்தத் திட்டத்தை சிறப்புத் திட்டமாக அறிவித்து பச்சைக்கொடி காட்டியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
முல்லைப் பெரியாறு, மேற்கு மலைத் தொடர்ச்சி ஆகியவற்றிற்கு அருகில் நியூட்ரினோ திட்டத்தை அனுமதித்து, சுற்றுப்புறச்சூழல், வன விலங்குகள் மற்றும் வனப் பகுதிகளுக்கும், தேனி வாழ் மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆகவே தேனி மாவட்டம் தேவாரம் அருகில் உள்ள பொட்டி புரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் பணியை, தமிழக மக்களின் பாதுகாப்புக் கருதி மத்திய பா.ஜ.க. அரசு கைவிடவேண்டும். முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரும் இத்திட்டத்திற்கு எதிராக உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
