திருகோணமலையின் சேருநுவர, வெருகல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற அவர், நேற்று (சனிக்கிழமை) இரவு முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த மீனவர் தனது சக மீனவர்கள் 7 பேருடன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற போதே காணாமல் போயுள்ளார்.
இந்நிலையில் மீனவரைத் தேடும் பணியினை பிரதேச மீனவர்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.