
சிந்து நதியில் இடம்பெற்ற படகு விபத்தில் நான்கு சிறுவர்கள் உள்ளிட்ட 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணத்திலுள்ள தோர்கர் மாவட்டத்தின் நல அமேசாய் கிராமத்திலிருந்து ஹரிபூர் மாவட்டத்தை நோக்கி நேற்று(புதன்கிழமை) மாலை சிந்து நதியில் ஒரு படகு சென்றது.
அதில் சுமார் 80 பேர் பயணித்தனர். இந்தநிலையில் குறித்த படகு, தர்பெலா பகுதியில் சென்றபோது ஆற்றில் மூழ்கியது. இதனால் படகில் இருந்தவர்கள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர்.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதுவரையில் 30 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் தொடர்ச்சியாக குறித்த பகுதியில் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
