
படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படகொன்றே இவ்வாறு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்துக்குள்ளான 70 தொன் நிறையுடைய படகில் பயணித்த 47 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக ஹொண்டூரஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் அனைவரும் அருகிலுள்ள பியூர்டோ லெம்பிரா நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக ராணுவப் பேச்சாளர் ஜொசே மெஸா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, படகு கவிழ்ந்தமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், அது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
