
இருக்கும் ஸ்ட்ரோம்போலி தீவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் எரிமலையில் இருந்து அடிக்கடி எரிகுழம்புகள் வெளியேறுவது வழக்கம் என்பதனால் இதனை பார்வையிட பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அங்கு வருகை தருகின்றனர்.
குறிப்பாக மலையடிவாரத்திலிருந்து 924 மீட்டர் தூரம் வரை சுற்றுலா பயணிகள் மலையேற்ற பயிற்சியில் ஈடுபடவும், உருகிய நிலையிலிருக்கும் பாறைகளை பார்க்கவும் அனுமதிக்கப்படுகின்றது.
இந்நிலையில் நேற்று இந்த எரிமலை திடீரென வெடித்தபோது, மலையை நோக்கி நடந்து சென்ற சுற்றுலா பயணிகளில் ஒருவர் மீது மலையிலிருந்து வந்த கல் தாக்கியதால் உயிரிழந்தார்.
மேலும் இந்த விபத்தில் மேலுமொருவர் காயமடைந்தார் என்றும் இதன் காரணமாக முன்னெச்சரிக்கையாக அங்கு தீயணைப்பு துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர் எனவும் அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
