நிலவின் தென்துருவ பகுதிக்கு சந்திரயான் 2 விண்கலத்தினை அனுப்புவதற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், Countdown இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது.உலக நாடுகளிலேயே முதன்முறையாக நிலவின் தென்துருவ பகுதியை ஆராய்வதற்கான முயற்சியை இந்தியா மேற்கொண்டிருந்த நிலையில், ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ள குறித்த விண்கலம், நாளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து குறித்த விண்கலம் ஏவப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டால், விண்வெளித்துறையில் இந்தியா தமது அடுத்த மைல்கல்லை எட்டும் என்பது குறிப்பிடத்தக்கது





