
கொல்கத்தாவில் இடம்பெற்ற விழாவொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “பிரான்ஸ் நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்துடன் அதிநவீன வசதிகள் கொண்ட 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்வனவு செய்ய இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
இரட்டை என்ஜின் கொண்ட அதிநவீன போர் விமானமான ரஃபேல் விமானம் வானில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கவும், வானில் இருந்து பூமியில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட நவீன போர் விமானமாகும்.
இந்த விமானம் இந்திய இராணுவத்திற்கு மிகவும் பலம் வாய்ந்ததாக கருதப்படுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
