
நிலையில், 4417 யாத்திரீகர்கள் அடங்கிய இரண்டாவது குழு இன்று (திங்கட்கிழமை) அதிகாலை ஜம்முவில் இருந்து புறப்பட்டுச் சென்றது.
இந்த ஆண்டு 46 நாட்கள் அமர்நாத் யாத்திரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக இலட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள்.
கடல்மட்டத்தில் இருந்து 3880 மீட்டர் உயரத்தில் தோன்றும் இந்த பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக, பாகல்காம் மற்றும் பல்தல் ஆகிய மலைப்பாதைகள் வழியாக குகைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்கின்றனர்.
அவ்வகையில் இந்த ஆண்டுக்கான புனித யாத்திரைக்கான முதலாவது குழு நேற்று சென்றிருந்த நிலையில், இரண்டாவது குழு இன்று புறப்பட்டுள்ளது.
சுமார் 4417 யாத்ரீகர்கள் கொண்ட இரண்டாவது குழுவினர் பகவதிநகர் அடிவார முகாமில் உள்ள யாத்ரி நிவாசில் இருந்து புறப்பட்டுள்ளனர்.
அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு அமைதியான மற்றும் பாதுகாப்பான யாத்திரையை உறுதி செய்ய, சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் உள்ள பாதுகாப்பு படையினர் தீவிர எச்சரிக்கையுடன் பணியாற்றி வருகின்றனர்.
