
அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தற்போது முன்னிலையாகியுள்ளார்.
குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கும் ரிசாட்டுக்கும் தொடர்புள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து விளக்கமளிப்பதற்கே அவர் தற்போது முன்னிலையாகியுள்ளார்.
தெரிவுக்குழுவில் முன்னிலையாகும் ரிசாட்
முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னிலையாகவுள்ளார்.
கடந்த 26ஆம் திகதி தெரிவுக்குழுவில் ரிசாட் முன்னிலையானபோது விசாரணைகளை முன்னெடுக்கப்படாமல், இன்று முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டது.
அதற்கமைய இன்று நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் ரிசாட் முன்னிலையாகவுள்ளார்.
தொடர் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கும் ரிசாட்டுக்கும் தொடர்புள்ளதாக மதகுருமார்கள் மற்றும் பெரும்பாலான அரசியல்வாதிகள் பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.
குறித்த குற்றச்சாட்டுகளின் உண்மையை கண்டறிவதற்காகவும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்வதற்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
