
தேயிலை தோட்டத்தில் பணிப்புரிந்துகொண்டிருந்த 10 பேர் குளவி கொட்டுக்கு இழக்காகி, வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 4 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், 6 பேர் வீடு திரும்பியுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 10 பெண் தொழிலாளர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
