
அவசியம் குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரஸ்க்கு தெளிவுபடுத்தியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்
பொலன்னறுவையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மைத்திரிபால சிறிசேன இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“ஐ.நா.செயலாளர் நாயகத்துக்கு தொலைபேசி ஊடாக தொடர்பினை அண்மையில் ஏற்படுத்தியிருந்தேன். இதன்போது மரணதண்டனையை இலங்கையில் நிறைவேற்ற வேண்டியதன் அவசியம் குறித்து அவருக்கு கூறியுள்ளேன்.
மேலும் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்திலிருந்து இலங்கையின் எதிர்கால தலைமுறையை காப்பாற்றுவதற்காக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக மரணதண்டனையை நிறைவேற்றவேண்டியது அவசியம் என்பதை அவருக்கு தெளிவுப்படுத்தியுள்ளேன்.
இத்தகைய தீர்மானத்துக்கு எந்ததொரு தனிப்பட்ட காரணங்களும் இல்லை” என மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
