
தடை விதிக்கும் புதிய சட்டம் ஒன்றினை கனேடிய அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது.
குறைந்துவரும் மீன்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அது உதவும் என நம்பப்படுகிறது.
சுறாக்களைப் பாதுகாக்கவும் மீன்கள் வாழும் இடங்களைப் பராமரிக்கவும் புதிய மீன்துறைச் சட்டம் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆசியாவிற்கு வெளியே கனடா சுறாத் துடுப்புகளை அதிக அளவில் இறக்குமதி செய்கிறது.
2018ஆம் ஆண்டில் சுமார் 148,000 கிலோகிராம் சுறாத் துடுப்புகள் இறக்குமதி செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு 2.4 மில்லியன் டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
