
ப்ளம்போரோ பகுதி கூப்பர் வீதியில் அமைந்துள்ள ‘African Lion Safari’ எனப்படும் இந்த விலங்குகள் சரணாலையத்தில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து, உடனடியாக உலங்குவானூர்தி மூலம் மீட்கப்பட்டு அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யானையால் தாக்கப்பட்டவர் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் எனவும், அவருக்கு பாரதூரமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ஹமில்ட்டன் பொது மருத்துவமனை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில், அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
