
இந்தக் குழந்தை மாடியில் இருந்து எவ்வாறு வீழந்தது என்ற தெளிவான விபரங்கள் எவையும் தெரியாத நிலையில், இதுகுறித்து அதிகாரிகள் விசாரணைகளை தீவிரப் படுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்ற போதிலும், நேற்று இரவு பத்து மணி வரையிலும் குழந்தையின் பெற்றோரைச் சந்திக்க முடியவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டேவிஸ்வில்லே விலேஜ் பகுதியில் உள்ள போல்லோய்ல் வீதி மற்றும் மவுண்ட் பிளெசன்ட் வீதிப் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில், நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.45ற்கு சற்று முன்னர் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
மாடியில் இருந்து வீழ்ந்த குழந்தை உயிராபத்தான காயங்களுக்கு உள்ளானதாக ரொறன்ரோ அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
