
மேலும், இந்த விபத்தின் போது குழந்தை ஒன்று படுகாயமடைந்த நிலையில், உயிர் தப்பியதாகவும், குறித்த குழந்தை, லண்டன் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
எனினும் குழந்தைக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் தொடர்பிலான மேலதிக விபரங்களும் வெளியிடப்படவில்லை.
போர்விச் லைன்னிற்கு அருகே, பெர்த் கவுண்டி லைன் 88 மற்றும் பெர்த் வீதி, 178 பகுதியில் நேற்று மாலை 6.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது உயிரிழந்த மூவரின் பெயர், வயது உள்ளிட்ட விபரங்கள் எதனையும் வெளியிடாத பொலிஸார், இவ்விபத்து குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
