
அத்துடன் எஞ்சிய 90 வீதமான தகுதியற்ற அரசியல்வாதிகளே அதிகமாக தீய செயல்களில் ஈடுபடுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரத்தினபுரியில் பாடசாலையொன்றில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள கட்டிட நிர்மாணப் பணிகளை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவிக்கையில், “வாக்குகளை மாத்திரமே இலக்காகக்கொண்டு செயற்படும் அரசியல்வாதிகளுக்கு நாட்டைப்பற்றி சிறிதளவும் அக்கறையில்லை. இந்த நாட்டில் எந்த அரசாங்கம் ஆட்சியமைத்தாலும் போதைப் பொருள் பாவனையை ஒரு போதும் கட்டுப்படுத்த முடியாது.
நாட்டில் நூற்றுக்கு பத்து வீதமான அரசியல்வாதிகள் மாத்திரமே அரசியலுக்கு தகுதியானவர்களாக இருக்கின்றனர். எஞ்சிய தகுதியற்ற அரசியல்வாதிகளே அதிகமாக தீய செயல்களில் ஈடுபடுகின்றனர்.
அவ்வாறான அரசியல்வாதிகளுடன் சேர்ந்து அரச திணைக்களங்களில் பணியாற்றும் அரச அதிகாரிகளும் தீய வழிகளில் செல்கின்றனர்.
எனவே அரச அதிகாரிகளிலும் நூற்றுக்கு 10 வீதமானவர்களே ஒழுக்கமானவர்களாக உள்ளனர்” என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
