
குறித்த கத்திக் குத்து நேற்று (வெள்ளிக்கிழமை), கிங் எட்வர்ட் மற்றும் டேலி அவனியு பகுதியில் இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, கத்திக் குத்துக்கு இலக்கான 38 வயதான ஆண் ஒருவர், ஆபத்தான நிலையில் மருத்துவ மனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த சம்பவம் எதற்காக நடத்தப்பட்டது, இதனை செய்தவர் யார் என்பது குறித்த தகவல் எதனையும் வெளியிடாத நிலையில், பொலிஸார் இதுகுறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
