
30 வயதான ட்ரஸ்சில்லா கிர்க்வுட் என்ற பெண்னே இவ்வாறு காணமால் போயுள்ளதாகவும், அவர் இறுதியாக கடந்த 13ஆம் திகதி தனது குடும்பத்தாருடன் பேசியதாகவும் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
குறித்த பெண்ணின் ஒளிப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார், அவர் குறித்த அடையாளங்களையும் விபரித்துள்ளனர்.
5’3 உயரம் கொண்ட இப்பெண், 135 பவுண்ஸ் எடை கொண்டவள் எனவும், பழுப்பு நிற கண்கள் மற்றும் கருப்பு முடி கொண்டவள் என்றும் பொலிஸார் விபரித்துள்ளனர்.
மேலும், அவர் இறுதியாக நீல ஜிப்-அப் ஹூடி மற்றும் வானவில் நிற லெகிங்ஸ் அணிந்திருந்தார் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவர் வின்னிபெக்கில் இருப்பதாக நம்பப்படுகிறது.
இவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள், அண்மையில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அறியத்தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
