
வின்னிபெக்கில் உள்ள வீடொன்றில் ஆண் ஒருவரும், செல்கிர்க்கை சேர்ந்த இரு பெண்களும் இந்த சம்பவத்துடன், கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
டெட்டியரேட் திட்டம் என அழைக்கப்படும் இந்த விசாரணை, 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது.
இதற்கமைய தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், பாரிய தேடுதலின் பின்னர் இந்த வலையமைப்பை கண்டுபிடித்துள்ளனர்.
இதன்போது, இரண்டு கிலோகிராம் மெத்தாம்பேட்டமைன், ஹெராயின் கலந்த ஏழு கிராம் ஃபெண்டானைல், 25,000 அமெரிக்க டொலர்கள் பணம், ஒரு செவ்ரோலெட் டிராக்ஸ் வாகனம் மற்றும் ஒரு டேஸர் ஆகியவற்றை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
இதுவரை கைது செய்யப்பட்ட மூன்று பேரும் மெத்தாம்பேட்டமைன் கடத்தல், ஹெராயின் கடத்தல் மற்றும் 5,000 டொலர்களுக்கும் அதிகமான குற்றங்களால் பெறப்பட்ட சொத்துக்களை வைத்திருத்தல் உள்ளிட்ட நீண்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்
