
ஒன்ராறியோ மாகாண அரசின் பணிப்புரையின் பேரில், ஒன்ராறியோ பொதுச் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரையிலும் மட்டும் 388 பேர் இவ்வாறு அதிகளவு போதை மாத்திரையை உட்கொண்டதால் உயிரிழந்துள்ளதாக ஒன்ராறியோ பொதுச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
எனினும், இந்த எண்ணிக்கையானது 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைவானது எனவும், 2017ஆம் ஆண்டில் 414 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை 2018ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் ஒன்ராறியோவில் இவ்வாறு 1,022 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 2017ஆம் ஆண்டில் அதன் எண்ணிக்கை 1,261 என்றும், 2016ஆம் ஆண்டில் அது 867ஆக இருந்ததாகவும் சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
