தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்புமாவட்ட அமைப்பாளர் மொஹமட் ஃபவாஸ்ஸின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணை கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவரை 18 ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டார்.
குறித்த நபர் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் கசெல்வத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து 72 மணிநேரம் தடுப்பு கவலையில் வைத்து விசாரிக்க நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தத்துடன் பின்னர் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் ஸ்டிக்கர்கள் புகைப்படங்கள் மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான காணொளிகள் தொலைபேசியில் வைத்திருந்தமையினை அடுத்து மொஹமட் ஃபவாஸ் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





