தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்ய வலியுறுத்தி பீட்டா விலங்குகள் நல அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து பீட்டா அமைப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) ஆய்வறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த ஆய்வறிக்கையில், இவ்வாண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 5 மாடுகளும் உயிரிழந்தமையை சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் குறித்த போட்டிகளின் போது காளைகள் சுமார் 16 மணிநேரம் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதன்காரணமாக உயிர்களுக்கு பாதுகாப்பற்ற இத்தகைய நிகழ்வுகளை அனுமதிக்க வேண்டாம் எனவும் ஜல்லிக்கட்டு சட்டத் திருத்தத்தை திரும்பபெற வேண்டுமென வலியுறுத்தியும் முதல்வருக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து உயர்நீதிமன்றத்திற்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்போம் என்றும் குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.





