
சஜின் வாஸ் குணவர்த்தனவுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 12ஆம் திகதிக்கு ஒத்திவைத்து, கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சஜின் வாஸ் குணவர்த்தனவுக்கு எதிரான வழக்கு விசாரணைகள், பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, இலஞ்சம் மற்று ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இந்த வழக்கை தாக்கல் செய்வதற்கு ஆணையாளர்களின் எழுத்து மூல அனுமதி சமர்பிக்கப்படாதமையால் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 12ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த ஆட்சிகாலத்தில் மிஹின் லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக சஜின் வாஸ் செயற்பட்டபோது, அந்நிறுவனத்தால் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களால் மில்லியன் ரூபாய் நஷ்டம், அரசாங்கத்திற்கு ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு இலஞ்சம் மற்று ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் வழக்கு தாக்கல் செய்ப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
