LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, June 26, 2019

நாட்டில் ஹிந்தி அலுவல் மொழியே தவிர தேசிய மொழி அல்ல : ராமதாஸ் சுட்டிக்காட்டு

கல்லூரிகளில் ஹிந்தியை கட்டாயமாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இன்று(புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தினை வலியுறுத்தியுள்ளார்.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இந்தியா முழுவதும் உள்ள அனைத்துக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஹிந்தி மொழியை கட்டாயப்பாடமாக்க மத்திய அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகள் அம்பலமாகியுள்ளன.

மாணவர்களின் விருப்பத்திற்கு மாறாக பல்கலைக்கழக நிர்வாகங்களின் துணையுடன் உயர்கல்வியில் ஹிந்தியைத் திணிக்க பல்கலைக்கழக மானியக்குழுவும், மத்திய அரசும் முயல்வது கண்டிக்கத்தக்கது.

நாட்டின் அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மாநிலப் பல்கலைக்கழகங்களில் பயிலும் எல்லா மாணவர்களுக்கும் ஹிந்தியை கட்டாய மொழியாக்க மத்திய அரசின் மனிதவள அமைச்சகம் விரும்புவதாகவும், அதுதொடர்பாக அனைத்துப் பல்கலைக்கழகங்களும் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழுவின் இணை செயலர் ஜிதேந்திரகுமார் திரிபாதி கடிதம் எழுதியுள்ளார். உண்மையில் இது கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி எழுதப்பட்ட கடிதம் ஆகும்.

பல்கலைக்கழக மானியக்குழுவின் இக்கடிதம் குறித்து டெல்லியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் கல்விக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியானதையும், அதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையும் அடுத்து தான் இவ்விவகாரம் வெளிவந்துள்ளது.

இந்தியா என்பது நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசும் நாடு ஆகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் மட்டும் 22 மொழிகள் உள்ளன. ஹிந்தி பேசாத மாநிலங்கள் மீது, குறிப்பாக தமிழகத்தின் மீது ஹிந்தி மொழி திணிக்கப்படுவதற்கு எதிராக கடந்த காலங்களில் ஏராளமான மாணவர் போராட்டங்கள் வெடித்துள்ளன.

அவ்வாறு இருக்கும் போது நாடு முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களும் ஹிந்தியை கட்டாயமாக படிக்க வேண்டும் என நினைப்பதே மிகவும் கொடூரமானது இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.

ஹிந்தி நாட்டின் அலுவல் மொழி தானே தவிர தேசிய மொழி அல்ல. அத்துடன் ஒரு தனிநபரின் விருப்பத்திற்காக ஒரு மொழியை அனைத்து மாநிலங்கள் மீதும் திணித்துவிட முடியாது“ என குறிப்பிடப்பட்டுள்ளது.




 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7