
போன வேலைத் திட்டங்களை ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களில் செய்ய முடிந்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் திருகோணமலையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அத்தோடு வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் இருக்கும் வேலையில்லா பட்டதாரிகளுக்கு விசேட கவனம் செலுத்தி விரைவில் நியமனம் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, 22 ஆயிரம் பட்டதாரிகளை உள்வாங்குவதற்கு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
