
பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் தழிழ் நாட்டில் வசிப்பதுடன் இன்று (வியாழக்கிழமை) காலை 8.30 மணியளவில் எஸ்.ஜீ. 002 இலக்கமுடைய ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் சென்னையிலிருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இதன்போது சந்தேக நபரின் பயணப் பொதியை சோதனை செய்த சுங்க அதிகாரிகள் 500 கிராமுடைய ஐஸ் போதைப் பொருளை கைப்பற்றியுள்ளனர்.
மேலும் குறித்த நபரை கைது செய்த விமான நிலைய அதிகாரிகள் அவரை பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் லால் வீரகோன் தெரிவித்தார்.
