
உதவுகின்றமைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் யோகாப்பயிற்சி செய்யும் வீடியோவை இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டார்.
அதில் யோகாவின் முக்கியத்துவம் குறித்து அவரது உரையும் அடங்கியிருந்தது.
இது குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவிக்கையில், “யோகாவை மேலும் பிரபல்யபடுத்துவதற்காக நீங்கள் தரும் ஆதரவுக்கு நன்றி. உங்களது இந்த யோகாப் பயிற்சி அனுபவத்தை பகிர்ந்து கொண்டதைக்காணும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று மோடி பதிவு செய்திருக்கிறார்.
இன்று சர்வதேச யோகா தினம் உலக அளவில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இலங்கை, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா தினம் கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது
