
23ஆம் திகதி முதல் ஜூலை முதலாம் திகதி வரை நாடு முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதனை நடத்துவதற்கான ஏற்பாட்டினை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற நிலையில் மட்டக்களப்பிலும் போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை சிறப்பாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் பணிப்புரைக்கு அமைவாக இன்று (வெள்ளிக்கிழமை) மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட போதைத் தடுப்புப் பிரிவினரும் அதனோடு இனைந்த திணைக்களங்களும் கலந்துகொண்டன. இதில் மாவட்ட செயலகத்தினாலும் பிரதேச செயலகங்களினாலும் மக்கள் வாழும் பகுதிகளுக்கு சென்று விழிப்புணர்வுகளையும் பேரணிகளையும் துண்டுப்பிரசுரங்கள் மூலமாகவும் மக்களை விழிப்படைச் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவற்றிக்கு மேலதிகமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைகழக மாணவர்கள், அரசாங்கத் திணைக்களங்கள் மற்றும் மக்கள் செறிந்து வாழும் இடங்கள் போன்ற இடங்களில் விழிப்புணர்வுகளையும் விசேடமாக வீடு வீடாகவும் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வீதி நாடகங்கள் விவாதப்போட்டிகள் ஆக்கப்போடிகள் சித்திரப்போட்டிகள் நடைபவணிகள் என பல்வேறுபட்ட நிகழ்சிகள் நடாதடதுவதுடன் போதை பொளுளை தடுப்பதற்கு சட்டங்களை வகுத்தலும் அமுல்ப்படுத்தலும் மது ஓழிப்பு நடவடிக்கையும் புனர் வாழ்வழித்தலும் என் கருப்பொருக்கு அமைவாக மட்;டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.
