
பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட 840 மில்லியன் டொலர் மதிப்புள்ள ஐஸ் ரக போதைப்பொருளே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
X-ray எனப்படும் ஊடுகதிர்ச் சோதனையின்போது, வழக்கத்துக்கு மாறாக ஏதோ ஒன்று இருப்பதை அவதானித்த அதிகாரிகள், ஒலிபெருக்கியைத் திறந்து பார்த்தபோது அதற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர்.
எனினும் குறித்த சம்பவம் தொடர்பாக இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் அவுஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்ரேலியாவில் கைப்பற்றப்பட்டுள்ள அதிக நிறையுடைய போதைப்பொருள் இதுவெனவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்தநிலையில் சந்தேக நபர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை அவுஸ்ரேலிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
