காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்திக்கும் நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்குமிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
சோனியா காந்தியின் இல்லத்தில் குறித்த சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றுள்ளது.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடர் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் ஆகியவை தொடர்பாக இருவரும் கலந்துரையாடலில் ஈடுபட்டு இருப்பார்களென எதிர்பார்க்கப்படுகின்றது.
17ஆவது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் 17ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





