டிபொருட்கள் சிலவற்றை மீட்டுள்ளதாக மாமடு பொலிஸார் இன்று(திங்கட்கிழமை) காலை தெரிவித்தனர்.
நேற்று மாலை வவுனியா அட்டமஸ்கட பகுதியிலுள்ள குளத்திற்கு அருகிலுள்ள மரப் பொந்தில் பொதி ஒன்று காணப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்ற பொலிஸார் அங்கு காணப்பட்ட பொதியை சோதனையிட்ட போது, குறித்த பொதியில் வெடிபொருட்கள் காணப்பட்டுள்ளன.
எஸ்.எல்.ஆர் மகசீன் 2, எஸ்.எல்.எல் தோட்டாக்கள் 08, ரி. 56 ரக தோட்டாக்கள் 02, என்பன மீட்கப்பட்டுள்ளன.
குறித்த வெடிபொருட்கள் அப்பகுதிக்கு எவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ளன. இதை யார் கொண்டு வந்தது போன்ற விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், இன்றைய தினம் நீதிமன்ற அனுமதியுடன் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை செயலிழக்க செய்வதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






