திணிக்கப்படமாட்டாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்..
சென்னை தலைமைச் செயலகத்தில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் “பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. பாடநூல் நிறுவனம் மூலமாக, புதிய பாடத்திட்டத்தை உருவாக்கி சரித்திர வரலாற்றைப் படைத்திருக்கிறார்கள். மூன்று ஆண்டுகளில் முடிக்க வேண்டிய புதிய பாடத்திட்டப் பணிகள், இரண்டே ஆண்டுகளில் முடிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு 1, 6, 9 ,11 ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. குறிப்பாக, 11 ஆம் வகுப்பு பாடத்திட்டம், தேசிய நுழைவுத் தேர்வுகளுக்கு ஏற்றாற்போன்று வடிவமைக்கப்பட்டது.
இந்த ஆண்டு 2, 3, 4, 5, 7, 8, 10, 12 ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகங்கள் பள்ளிகளில் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
12 ஆம் வகுப்பு பாடத்திட்டம், தேசிய நுழைவுத் தேர்வுகளைச் சந்திக்கின்ற வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சித் துறையுடன் இணைந்து படசலைகளில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாததற்கான பணிகள் நடைபெற்றன. அனைத்துப் பள்ளிகளும் சுத்தம் செய்யப்பட்டிருக்கின்றன. குடிநீர் வசதியும் செய்யப்பட்டிருக்கிறது.
மும்மொழிக் கொள்கையைப் பொறுத்தவரையில் மத்திய அமைச்சர்கள், அதற்கு தெளிவான விளக்கத்தை சொல்லியிருக்கிறார்கள். தமிழகத்தில் எந்த மொழியையும் திணிக்கும் நோக்கம் இல்லை என தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். அந்தக் கேள்விக்கு இனி இடமில்லை”. என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.






