உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இந்திய அணிக்காக ‘நம்ம டீம் இந்தியா’ என்ற பாடலை உருவாக்கியுள்ளார்.
எதிர்வரும் 5ஆம் திகதி இந்திய அணி தனது முதல் போட்டியை ஆரம்பிக்கவுள்ளது. இந்நிலையில், அன்றைய தினமே ஜீ.வி பிரகாஷின் குறித்த பாடல் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
‘கிரிக்கெட்டோ கிரௌன்’ என ஆரம்பிக்கும் இந்த பாடல் இந்திய அணி உலகக்கோப்பையை வெற்றிகொள்ள வாழ்த்தும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





