வெனிசுவேலாவிலுள்ள கனேடியத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘வெனிசுவேலா ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தினை விமர்சித்த கனேடிய தூதர்களுக்கான அங்கீகாரம் மறுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, வெனிசுவேலாவில் இயங்கி வந்த கனடா தூதரகத்தின் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் வகையில் கனடா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
தூதரகப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ள அதேநேரம், கனடாவுக்கான வெனிசுவேலா தூதர்களின் அந்தஸ்தும் மீளாய்வு செய்யப்படவுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.





